மீண்டும் ஒருமுறை.. சரிகமப மேடையில் பூரிப்படைந்த போட்டியாளர்- நெஞ்சை உருக்கிய பதிவு
சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று நிறைவடைந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாக ஒளிபரப்பாகிய மற்றுமொரு நிகழ்ச்சியில் போட்டியாளர் அபிஷேக் பாடிய பாடல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சரிகமப 5
சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகியது.
இந்த சீசனில் வெற்றியாளராக சுசாந்திக்கா தெரிவு செய்யப்பட்டார்.
டைட்டில் வின்னராக மக்களால் கொண்டாடப்பட்ட சுசாந்திக்கா, சரிகமப எல்லா சுற்றுக்களிலும் தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிக்காட்டினார். இதன் காரணமாக இவரே முதல் இறுதிச்சுற்று போட்டியாளராகவும் தெரிவானார்.

இப்படி ஏகப்பட்ட விடயங்கள் சரிகமப செட்டில் நடந்தன. போட்டியாளர்களாக பங்கேற்ற பல போட்டியாளர்களுக்கு தொலைக்காட்சி சார்பில் பெறுமதி வாய்ந்த பரிசுக்கள் வழங்கப்பட்டன.
உருக வைத்த அபிஷேக்
இந்த நிலையில், நிகழ்ச்சி பரபரப்பாக சென்று நிறைவடைந்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக மீண்டும் ஒரு கொண்டாட்டம் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகியது. அதில் கலந்து கொண்ட அபிஷேக் தன்னுடைய அசாத்திய திறமையை மேடையில் வெளிக்காட்டிய விதம் அங்கிருந்தவர்களை புல்லரிக்க வைத்தள்ளது.
கடைசியாக நடுவர்களில் ஒருவராக இருந்த கார்த்திக் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவருக்கு பரிசு கொடுத்தும் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |