சரிகமப தேவயானி மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சரிகமப சீனியர் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்துகொண்ட தேவயானி மகள் இனியாவிற்கு தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சரிகமப இனியாவிற்கு கிடைத்த லக்
நடிகை தேவயானியின் மகள் இனியா பிரபல டிவியில் ஒளிபரப்பான 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களில் மனதில் இடம்பிடித்தார்.
இவரது அம்மா தேவயானி 80ஸ்களின் மனதில் இடம்பிடித்த முன்னனி நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

அம்மா இப்படி நடிகையாக இருக்கிறார் அப்படியென்றால் அம்மாவின் உதவியுடன் தான் சரிகமப மேடையில் இனியாவிற்கு வாய்ப்பு கிடைத்ததென்று நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை.
இனியா தன்னுடைய திறமையால் மட்டுமே சரிகமப மேடையில் வாய்ப்பு கிடைத்து வந்தார். இவர் ஆரம்பத்தில் ரசிகர்களிடம் விமர்சனம் பெறும் வகையில் பாடி வந்தார்.
ஆனால் அதன் பின்னர் பாடலை மிகவும் திறமையாக அழகாக சுருதியுடன் பாடினார். இதன் பின்னர் இனியாவிற்கு ரசிகர்களம் குவிந்தனர். இந்த நிலையில் தற்போது இனியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இந்நிலையில், தற்போது இனியா படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குநர் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் சாய் குமார் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 'கோர்ட்' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இது நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்றது.

இந்த திரைப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை தியாகராஜன் வாங்கி உள்ளார்.
அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தேவயானியின் மகள் இனியா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாக வில்லை. இருந்தாலும் இந்த தகவலுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |