சரிகமப - வில் அந்திரத்தில் தொங்கியும் சுருதியுடன் பாடிய போட்டியாளர் - மெய்சிலிர்த்த தருணம்
சரிகமப பஞ்சபூத சுற்றில் போட்டியாளர் அருண் அந்திரத்தில் தொங்கியவாறு சுருதியுடன் பாடியுள்ளார். இதை நடுவர்கள் முதற்கொண்டு அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்தனர்.
சரிகமப
சரிகமப வில் தற்போது பஞ்சபூத சுற்று ஆரம்பமாகி உள்ளது. தற்போது அனைத்து போட்டியாளர்களும் தங்கள் திறமையை முன்னர் இருந்ததை விட இப்போது நன்றாக வளர்த்துக்கொண்டுள்ளனர்.
இதற்கென்றே சரிகமப குழுவும் ஒத்துழைக்கிறது. அதாவது இதுவரை ஏதாவது பெர்போமன்ஸ் செய்தால் சாதாரணமாக அரங்கத்தை தயார் செய்வார்கள்.
ஆனால் இந்த பஞ்சபூத சுற்றில் போட்டியாளர்கள் பாடலுக்கு தகுந்ததை போல தயார் செய்துள்ளனர்.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இதில் போட்டியாளர்கள் எதற்கு சம்பந்தமாக பாடுகிறார்களோ அதே போல அரங்கம் தயார் செய்யப்பட்டிருக்கும்.
அந்த வகையில் போட்டியாளர் அருண் கல்லை மட்டும் கண்டால் பாடல் பாடும் போது அவரை மேலே கட்டி தூக்குகின்றனர்.
சாதாரணமாக நின்று சுருதி மாறாமல் பாடலாம். ஆனால் மேலே கட்டி தூக்கும் போது நமக்கு மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.
ஆனால் அருண் அந்த எல்லா பிரச்சனைகளையும் தாண்டி பார்வையாளர்களின் மனதை திருடும்படி பாடலை பாடி இருந்தார்.
இதற்கு நடுவர்கள் முதற்கொண்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் திகைத்து பார்த்தனர். பாராட்டும் குவிந்த வண்ணம் இருந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
