சரிகமப- வின் சிங்கப்பெண் பவித்ராவிற்கு வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர்
சரிகமப சீனியர் சீசன் 5இல் பைனல் வரை வந்து மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட சிங்கராக இருப்பவர் பவித்ரா அவருக்கு தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சரிகமப
சரிகமப சீனியர் சீசன் 5 இன் இறுதிச்சுற்று 23 ம் திகதி நடைபெற்று முடிந்தது. இதில் டைடில் வின்னராக போட்டியாளர் சுஷாந்திக்கா தேர்ந்தெடுக்கபட்டார்.
பல திறமையாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று வருகின்றது. கடந்த சீசன்களை விட இந்த சீசன் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் பரிசுகளை அள்ளி சென்றனர்.

இந்த சீசன் 5இன் மக்கள் விருப்ப வாக்கு மூலம் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் போட்டியாளர் பவித்ரா. இவர் பாடிய அஞ்சுவண்ண பூவே பாடல் மக்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலமாக்கி அவர்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தது.
இவருடைய மகளுக்கு சரிகமப நிகழ்ச்சி மூலமும் ரசிகர்கள் மூலமும் பல உதவிகள் கிடைத்தது. இதன் பின்னர் பவித்ரா தன்னுடைய வேலைகளை கவனித்து வந்தார்.

அப்போது தான் பிரபல இசையமைப்பாளரிடம் இருந்து பவித்ராவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது பவித்ராவிற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இமானுடன் அவர் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |