Dedication round: இறந்த தந்தைக்காக பாடல் பாடி சரிகமப மேடையை சோகத்தில் ஆழ்த்திய தருணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சி
இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகள் தான். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு சுற்றிலும் தமது அட்டகாசமான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் இருந்து இந்த வாரமும் இந்த dedication round தொடர்ந்துள்ளது. இதன் மூலம் அனைவரும் தமது சிறப்பான திறமைகளை பாட்டி வருகின்றனர்.
இதன்போது சில போட்டியாளர்களின் தாய் தந்தையை மேடைக்கு அழைத்து பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களும் மறக்க முடியாத தருணங்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் கொடுக்க முடிகின்றது.
இந்த நிலையில் போட்டியாளர் விஜய் ஆறு மாதங்களுக்கு முன்னர் இறந்த தனது தந்தைக்காக பாடல் பாடுகிறார். இதன்போது தனது தந்தையை பற்றி பல விஷயங்களை மேடையில் கூறி தந்தையின் புகைப்படத்தை சிம்மாசனத்தில் அமர்த்தி தாயையும் உட்கார வைத்து பாடுகிறார்.
இதன் போது விஜயினுள் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதா? எனும் அளவிற்கு சிறப்பாக பாடலை பாடி முடிக்கிறார். இப்படி பாடி முடித்ததும் அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். இப்படி சோகத்தில் ஆழ்ந்த மேடையாக சரிகமப மேடை காணப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |