சரிகமப அரங்கத்தை கலங்க வைத்த மற்றொரு இலங்கையின் செல்லகுரல்: அன்பாய் அரவணைத்துக் கொண்ட தருணம்!
சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த மற்றொரு குரல் ஒன்று அரங்கத்தையே அழவைத்திருக்கிறது.
சரிகமப ஜூனியர்
பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.
இது ஒரு பாடல் நிகழ்ச்சி இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இருந்து பலர் தன் பாடும் திறமையை வெளிப்படுத்த இந்நிழச்சிக்கு வந்திருக்கிறார்கள்.
தற்போது சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி இன்று இறுதிப் போட்டிக்கு வந்து நிறைவடையவுள்ளது. இந்நிகழச்சியை அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், கார்த்திக், நடிகை அபிராமி மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.
இலங்கை பாடகி
இந்த நிகழ்ச்சியில் முன்னதாகவே கில்மிசா என்ற பாடகி அறிமுகமாகி தற்போது செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். இந்நிலையில் இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மற்றொரு பாடகியை இரண்டு வாரங்கள் கடந்து தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
இலங்கையில் கண்டிப் பகுதியைச் சேர்ந்த அசானி என்றப் சிறுமி அரங்கத்தில் நுழைந்திருக்கிறார். இவரை அங்கிருந்தவர்கள் ஆதரித்து தனது சரிகமப குடும்பத்தில் சேர்த்துக் கொண்ட காட்சி தற்போது ப்ரோமாவாக வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
அந்தக் காணொளி இதோ,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |