சரிகமப - வில் அசல் பாடல் தோற்க பாடிய போட்டியாளர்கள் - வாக்களிக்க திணறிய நடுவர்கள்
சரிகமபவில் தற்போது வாக்களிக்கும் போட்டியில் போட்டியாளர்கள் பாடிய பாடலால் நடவர்கள் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் திணறினார்கள்.

சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்களின் மனம் பறித்த நிகழ்ச்சி தான் சரிகமப. இதில் தற்போது லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிய பலர் தற்போது இசைத்துறையில் சாதித்து வருகின்றனர்.

தற்போது லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வாரம் One-on-One சுற்று இடம்பெற உள்ளது. இந்த சுற்றில் ஒவ்வொரு போட்டியாளர்களும் இருவரிருவராக போட்டியிட்டு பாடுவார்கள். அவர்களுக்கு நடுவர்கள் ஒவ்வொருவரும் வாக்களித்து ஒருவரை தெரிவு செய்வார்கள்.

அந்த வகையில் தற்போது அபிஷேகா அக்சித் போன்ற போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் இல்லை என்பதற்கிணங்க பாடி அசத்தி உள்ளனர். இந்த நிலையில் நடுவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து யோசித்துள்ளனர்.