சரிகமப-வில் நொடிக்கு நொடி எதிர்பார்ப்பை தூண்டும் போட்டியாளர்கள்
சரிகமபவில் இந்த வாரம் இறுதி கட்டத்திற்கான முதல் தேர்வுச்சுற்று அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள காணொளியின் படி இரண்டு சிறப்பு போட்டியாளர்களின் சிறப்பு ப்ரொமோ வெளியாகி உள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் தற்போது மனம் கவர்ந்த இசை நிகழ்ச்சியாக வலம் வரும் நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி தான். இதில் மிகவும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பல சுற்றுக்களை வெற்றிகரமாக முடித்து வந்து தற்போது இறுதிச்சுற்றுக்கான போட்டியாளர்களை தெரிவு செய்யும் சூழ்நிலைக்கு வந்துள்ளது.
கடந்த வாரம் பக்தி திருவிழா போட்டியில் இருந்து இரண்டு போட்டியாளர்களான ஷ்ரஜான்வீ மற்றும் அக்ஷதா வெளியேறி சென்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் இறுதிக்கட்டதிற்கான முதல் தெரிவு சுற்று (Ticket to Finale) வில் இன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இருந்தும் நாளை தான் முதலாவதாக தெரிவு செய்யப்படப்போகும் போட்டியாளர் யார் என்பதை நாம் அறியலாம். இருந்த சரிகமப குழுவால்
தற்போது வெளியாகிய ப்ரொமோவின் அடிப்படையில் பார்த்தால் நாளை திவினேஷ் அல்லது ஹேமித்ரா முதல் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகும் போட்டியாளர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
