சரிகமப - வில் எதிர்பாராமல் 6வது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு! காலில் விழுந்த தந்தை
சரிகமப லிட்டில் சாம்ஸ் 5 இல் தற்போது ஆறாவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவானபோது நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பார்ப்பவரை கண்கலங்க வைத்துள்ளது.

ஆறாவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு
சரிகமப இசை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். உலகத்தில் பல இடங்களில் இருந்து இந்த மேடைக்கு வந்து தங்களுடைய இசை திறமையை காட்டி செல்கின்றனர் போட்டியாளர்கள்.
இதுவரை இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் உலகெங்கிலும் தங்கள் குரலை ஒலிக்கச்செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
தற்போது சரிகமப சீசன் 5 இன் இறுதிபோட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் அபிஷேக்கா ஐந்தாவது போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஆறாவதாக ஒருவர் தெரிவாகும் வாய்ப்பு சரிகமப கொடுத்தது.
அந்த வகையில் யார் ஆறாவது போட்டியாராக வருவார் என எதிர்பாத்துக்கொண்டு இருந்த நிலையில் நடுவர்களால் சுமன்ராஜ் ஆறாவது போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது சுமன்ராஜ் இன் தந்தை அவருடைய காலில் விழுந்து வணக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |