சரிகமப-வில் இரு போட்டியாளர்களின் பாடலில் மெய்சிலிர்த்துப்போன நடுவர்கள்
தற்போது மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த போட்டியாளர் திவினேஷ் மற்றும் தியா நயனின் குறுகிய காணொளி வெளியாகி உள்ளது. இதை இணையத்தில் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.
அதிலும் ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை இந்த போட்டியில் கவர்ந்து வரும் போட்டியாளர்களில் திவினேஷ் என்ற சிறுவனும் ஒருவர். இவர் எந்த பாலை எடுத்தாலும் அதை அருமையாக பாடுவார்.
அந்த வகையில் இந்த வாரம் நடக்கவிருக்கும் சரிகமப சக்கமத்தில் திவினேஷ் மற்றும் முன்னாள் போட்டியாளரான நாகர்ஷூன் சேர்ந்து துள்ளி வரும் வெள்ளி நிலா என்ற பாடலை பாடி அரங்கத்தில் இருந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் பாடல் பாடி கவர்ந்துள்ளனர்.
இதே காணொளியில் தியா நயனும் பாடல் பாடி தனது திறமையை காட்டியுள்ளனர். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |