கணவனுக்காக தன் கிட்னியை கொடுத்த மனைவி! சரிகமப அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம்
சரிகமப லிட்டில் சாம்ஸ் இல் போட்டியாளராக பங்கேற்றுவரும் கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி மித்ராவின் தந்தை சரிகமப மேடையில், தனது மனைவி தனக்கான தன் கிட்னியை தியாகம் செய்த நெகிழ்ச்சியாக விடயம் குறித்து பகிர்ந்துக்கொண்ட காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சரிகமப லிட்டில் சாம்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. சரிகமப சீனியர் சீசன் 5 முடிந்தவுடன் சரிகமப லிட்டில் சாம்ஸ் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெற்றிநடை போட்டு வருகின்றது.

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் சந்தித்த பல பிரச்சனைகளை பற்றி பேசி இருக்கிறார்கள்.
அதுபோலத்தான் மாணவி மித்ரா பற்றிய விடயங்களும் தெரியவந்தது. இவர் ஆடிஷனில் கலந்துகொள்ளும்போதே தனியாகத்தான் கலந்து கொண்டார்.

அதனால் நடுவராக பங்கேற்றுவரும் பாடகி சைந்தவி உனக்கு அக்காவாக நான் இருக்கின்றேன் தைரியமாக பாடு என மித்ராவுக்கு துணையாக மேடையில் பெற்றோர் அமருவதற்கான இருக்கையில் அமர்ந்திருந்தார்.இந்த காணொளி வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது.

அதனை தொடர்ந்து மித்ராவின் அம்மாவும் அப்பாவும் வராமல் அவரது தனியாக வந்ததை பற்றி சைந்தவி விசாரிக்க, அப்போதுதான் பலருக்கும் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொல்லி இருந்தார். அதாவது மித்ராவின் அப்பாவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதையும், அப்பாவுக்கு தன் அம்மா தான் சிறுநீரகத்தை வழங்கியுள்ளார் என்பது குறித்தும் பகிர்ந்துக்கொண்டார்.

இந்நிலையில், முதல் முறையாக மித்ராவின் பெற்றோர் பல சிரமங்களை தாண்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதன்போது மேடையில் மித்ராவின் பெற்றோர் பகிர்துக்கொண்ட விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |