10 வருட காதலி செஞ்ச தியாகம்! மனம் திறந்த இலங்கை பாடகர் சரிகமப சபேசன்
சரிகமப புகழ் சபேசன் தனது காதலி தனக்காக கடந்த 10 வருடங்களாக செய்த தியாகம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் பேசிய நெகிழ்ச்சியான விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
சரிகமப சீனியர் சீசன் 5 பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பான மக்களின் மனம் கவர்ந்த சரிகமப சீனியர் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் சுகிர்தராஜா சபேசன்.சபேசனுக்கு 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.

இவர் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரிகமப சீனியர் சீசன் 5
மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இதில் இறுதிச்சுற்று அதாவது வின்னருக்கான சுற்று கடந்த நபம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்றது.
இதில் டைடில் வின்னராக சுசாந்திக்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவதாக போட்டியாளர் சபேசன் தேர்ந்தெடுக்கபட்டார்.மூன்றாவதாக சின்னு செந்தமிழன் மற்றும் மக்கள் விருப்பப்படி பவித்ராவும் தேந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று முன்னர் இறுதிச்சுற்றுக்கு தெரிவான ஆறு போட்டியாளர்களுக்கும் Pre Finale Celebration இடம்பெற்றது. இதில் ஆறு போட்டியாளர்களின் நெருங்கிய உறவுகளின் நெகிழ்ச்சியான தருணங்கள், போட்டியாளுக்கு பெற்றோரின் ஆசீர்வாதங்கள் என பல விடயங்கள் இடம்பெற்றன.
அதன் போது தான் சபேசன் அவர் பாடுவதற்கு முன்னர் தான் 10 வருடமாக ஒரு பெண்ணை காதலிப்பதாக குறிப்பிட்டு மேடையில் தனது காதலியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

காதலி குறித்து சபேசன் கூறிய விடயம்
சரிகமப நிகழ்சிக்கு பின்னர் சபேசன் பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வரும் நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் தனது காதலியின் தியாகம் குறித்து பேசியுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், 10 வருடமாக தனது காதலி தனக்காக காத்திருப்பதாக பெருமையாக கூறியதுடன், சபேசன் வெற்றிப்பெறுவான் என்றும், ஒரு நல்ல இடத்துக்கு போவான் என்றும் தன்னை விட தன் காதலி தான் அதிகமாக நம்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர், என் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், எனக்காக கடந்த 10 வருட காலமாக செய்யுள்ள தியாகங்களுக்கும் நான் வாழ்க்கை முழுவதும் அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது சக போட்டியாளராக பங்கேற்ற தேவயானியின் மகள் இனியா குறித்தும் பெருமையாக பேசியுள்ளார்.
இனியாவுக்கு தான் ஒரு பிரபல நடிகையின் மகள் என்ற எண்ணம் துலியளவும் கிடையாது. ஒரு தங்கையை போல் பழகுவார். எங்களுடன் சமமாக இருந்து சாப்பிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |