கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சரிகமப புகழ் இனியா! வைரலாகும் காணொளி
பிரபல நடிகை தேவயானியின் மகள், சரிகமப புகழ் இனியா முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், அழகிய சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணைத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சரிகமப இனியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப சீனியர் சீகன் 5 இல் போட்டியாரளாராக பங்கேற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இனியா. இவர் பிரபல நடிகை தேவயானியின் மகள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் தன் மகளை பாடகியாக மாற்றக்கூடிய செல்வாக்கு தேவயானிக்கு இருந்தும் தன் திறமையாலும் அவரின் சொந்த முயற்சியாலும் மட்டுமே தனது மகள் வெற்றி பெற வேண்டும் என்ற தேவயானியின் நோக்கத்தையும் இனியாவின் நேர்மையையும் பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.

திறம்பட இசையை கற்று நேர்த்தியாக பாடி அசத்திய இனியா பல சுற்றுகளில் அசத்தலான பாடல்களை பாடி நடுவர்கள் மனதில் இடம்பிடித்து அடுத்தடுத்த கட்டத்திற்கு வந்தார்.ஆனால், இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தவறவிட்டார்.
அம்மாவைப் போல மகளும் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் சொந்த முயற்சியால் மட்டுமே இனியா பாடகியாக மாறியுள்ளார்.

தற்போது இனியா கதாநாயகியாக ஒரு படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள்வெளியானது.
இந்நிலையில், அழகிய சேலையில், அசத்தலாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனியா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |