அட சரிகமப இனியா நடனத்திலும் பட்டைய கிளப்புறாங்களே! படு வைரலாகும் காணொளி
பிரபல நடிகை தேவயானியின் மகள், சரிகமப புகழ் இனியா ட்ரெண்டிங் பாடலுக்கு அசத்தலாக நடனமாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணைத்தில் படு வைரலாகி வருவதுடன் லைக்குகளை குவித்து வருகின்றது.
சரிகமப இனியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரிகமப சீனியர் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, தனது இனிமையான குரலாலும் சிறப்பான பாடல் திறமையாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் இனியா.
இவர் பிரபல நடிகை தேவயானியின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தன் மகளை எளிதாக பாடகியாக உயர்த்தக்கூடிய செல்வாக்கு தேவயானிக்கு இருந்தாலும், தனது மகள் தன் திறமையாலும் கடின உழைப்பாலும் மட்டுமே முன்னேற வேண்டும் என்பதே அவரின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது.

அதேபோல், இனியாவும் தன் முயற்சியால் மட்டுமே தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்தார். அவர்களின் இந்த நேர்மையான அணுகுமுறை பலராலும் பாராட்டப்பட்டது.

இசையை முறையாக கற்றுக்கொண்டு, ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பான பாடல்களை தேர்வு செய்து திறம்பட பாடி நடுவர்களின் கவனத்தை ஈர்த்த இனியா, அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். இருப்பினும், இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

தாயைப் போலவே நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இனியா தனது சொந்த முயற்சியால் பாடகியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். மேலும், தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ட்ரெண்டிங் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனியா வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |