சரிகமப & DJD இணைந்து கொடுக்கப்போகும் இன்ப அதிர்ச்சி - வந்தது புதிய அப்டேட்
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப மற்றும் DJD என்ற இரண்டு ரியாலிட்டி ஷோக்கள் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சரிகமப மற்றும் DJD குழு
பிரபல டிவி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ரியாலிட்டி ஷோக்களில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4 என இரண்டும் மக்களிடம் தொடர் வரவேற்பை பெற்று வருகின்றன.
இவை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளாகும்.
ரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4. அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், எஸ்பிபி சரண், சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நடனமாடக்கூடிய சாதாரண மக்களை ஊக்குவிக்கும் விதமாக டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாபா பாஸ்கர், சினேகா ஆகியோருடன் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடுவராக பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு உலகம் முழுவதும் எக்கசெக்கமான தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு சூப்பர் ஹிட் ஷோக்களும் ஒன்றால் இணைந்தால் எப்படி இருக்கும்?
இந்த எதிர்பார்ப்பு இந்த வாரம் அரங்கேர உள்ளது. வரும் வாரம் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு தினங்களும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் குழுவினர் இணையும் மெகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |