ஒவ்வொரு பெண்களிடமும் இருக்க வேண்டிய 5 புடவைகள்: என்னென்ன தெரியுமா?
பொதுவாக பெண்கள் புடவைகள் கட்டினாலே தனி அழகுதான். புடவைகளை அணிவது தலைமுறை தலைமுறையாக வந்துக் கொண்டிருப்பதாகும்.
அன்றாடம் அணிவதில் துவங்கி விசேஷ நாட்கள் வரை புடவை அணிவது பெண்களின் பண்பாட்டு அடையாளமாக உள்ளது. இந்த காலத்தில் எவ்வளவு விதவிதமான ஆடைகள் வந்திருந்தாலும் புடவையின் மதிப்பு குறையவே இல்லை.
அந்த காலத்தில் இருந்த பெண்கள் பாவாடை தாவணி அல்லது புடவையை மட்டுமே ஆடையாக அணிந்தார்கள். புடவை அணிவதால் பெண்களுக்கு உடலில் சில நன்மைகள் கிடைக்கிறது என அறிவியல் கூறுகிறது.
அந்த வகையில் பெண்களிடம் இருக்கவேண்டிய 5 புடவைகள் என்னென்ன என்பது பற்றி தெரியுமா?
மங்களகிரி காட்டன் பட்டுப் புடவைகள்
ஆந்திர மாநிலம் மங்களகிரி நகரத்தில் இருந்து உருவான மங்களகிரி சேலைகள் கையால் நெசவு செய்யப்படுகின்றன.
மங்களகிரி புடவை அதிகம் அழகாக மிளிர நிஜாம் வடிவமைப்பு மற்றும் பார்டரில் உள்ள ஜரிகை வேலைப்பாடுகள் தான் காரணமாக அமைக்கின்றன. இந்த வகை புடவைகள் நவநாகரீகமானது மட்டுமல்லது அனைத்து பருவத்திற்கும் உடுத்திக்கொள்ள ஏற்றது.
பாகல்புரி பட்டுப் புடவைகள்
பீகார் மாநிலத்தின் பெருமையாக பாகல்புரி புடவைகள் வலம் வருகின்றன. இந்திய பெண்களிடையே இந்த புடவைக்கு நல்ல வரவேற்பு உண்டு.
உற்பத்தியின் போது குறைந்த எண்ணிக்கையிலான பட்டுப்புழுக்களைப் பயன்படுத்துவது, சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தயாராவது போன்ற காரணங்களால் இந்த புடவை பெண்களிடையே இன்னும் அதிக அளவில் விரும்பப்படுகிறது.
நவ்வரி புடவைகள்
நவ்வரி புடவைகள், மராட்டிய பெண்களால் அதிக அளவில் விரும்பி அணியப்படுகிறது.
அங்கு அவர்கள் மடிசார் போன்ற வேறு ஒரு வடிவத்தில் கட்டிக்கொண்டாலும், இந்தியாவில் பிற பகுதிகளில் வழக்கமான பாணிகளிலும் அணியப்படுகிறது. இந்த புடவை 9 கெஜம் கொண்டது.
கஸ்தா சாரி, நவ்வரி, லுகேட், நவ் வாரி மற்றும் சகாச்சா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
கோசா பட்டுப் புடவைகள்
இந்தியப் பட்டுப் புழுவான அன்தெரியா மைலிட்டாவிலிருந்து பெறப்பட்ட கோசா பட்டுப் புடவைகள் சத்தீஸ்கரின் பெருமையை பறைசாற்றுகிறது.
இந்த வகை பட்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வகை புடவைகளின் பட்டு நீடித்து உழைக்க கூடியது மற்றும் மென்மையானது. இதனை தூய்மையாக பராமரிப்பது சற்று சிரமம் தான் என்றாலும், குறைந்த அளவிலான முயற்சியிலேயே நீங்கள் நேர்த்தியான தோற்றத்துடன் காட்சியளிக்க கோசா பட்டுப்புடவைகள் உதவுகின்றன.
துஷார் பட்டு
இந்தியா முழுவதும் பிரபலமான பட்டுகளில் ஒன்று துஷார் பட்டு. பல வகையான பட்டுப்புழுக்களைப் பயன்படுத்தி துணி தயாரிக்கப்படுவதால், அவ்வளவு சீக்கரம் வெளுத்துப் போகாது.
இயற்கையான நெசவு, செழுமையான அமைப்பு மற்றும் ஆழமான தங்க நிறம் ஆகியவற்றின் காரணமாக, துஷார் பட்டுக்கு சந்தையில் அதிக மதிப்பு உள்ளது.
இது மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த கைத்தறி புடவையை நீங்கள் திருமணத்திற்கோ அல்லது அது சார்ந்த நிகழ்வுகளுக்கு அணியும் போது எடுப்பாக இருக்கும்.