குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு
வாரம் இரண்டு முறை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய மீன் வகைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மீன்
அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலும் பிடித்த உணவு என்றால் அது மீன் தான். மீனை குழம்பு, பொரித்து சாப்பிடுவது, புட்டு செய்து சாப்பிடுவது என பல வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றனர்.
ஆனால் மீன்கள் எப்பொழுதும் விலை அதிகமாகவே இருக்கின்றது. அதிக புரதச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீனில் விலை உயர்ந்ததில் தான் இவ்வாறான சத்துக்கள் இருப்பதாக நம்மில் பெரும்பாலான நபர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் விலை குறைந்த மீன்களிலும் இந்த சத்துக்கள் அனைத்தும் காணப்படுகின்றது. விலை குறைந்த மீன் குறித்தும் அதிலுள்ள நன்மையை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

மலிவான மீன்கள்
மலிவான விலையில் கிடைக்கும் மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில், விலை உயர்ந்த மீன்களில் உள்ள சத்துக்களை விட அதிகமாகவே இருக்கின்றது. இதனை வாரம் இரண்டுமுறை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு அளிப்பதுடன், இதிலுள்ள சத்துக்கள் முடியின் வேர்க்கால்களுக்கு அதிக சத்துக்களை கொடுக்கின்றது. தலையில் ரத்த ஓட்டத்தினை அதிகரித்து நரைமுடி வராமலும், கூந்தல் அடர்த்தியாக வளரவும் செய்கின்றது.

வயதான நேரத்தில் ஏற்படும் மூட்டுவலிகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. இதிலுள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆர்த்ரைடிஸ் என்னும் மூட்டு வாதம் மற்றும் மூட்டு வலி அபாயத்தை தடுக்கின்றது.
இதய நோய் அபாயத்தை தவிர்க்கவும் செய்கின்றது. இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவை வேகமாக குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தினைக் கட்டுப்படுத்தவும், ரத்த நாளங்களில் ரத்த கட்டிகள் ஏற்படுவதை தடுக்கவும் செய்கின்றது.
சிறு குழுந்தைகள் முதல் ் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நினைவாற்றலை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |