பாதாம், குடைமிளகாய் சட்னி... வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்வது?
பாதாம் மற்றும் குடைமிளகாய் வைத்து சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக காலை உணவாக வீடுகளில் இட்லி தோசை தான் அதிகமாக விரும்புகின்றனர். இதற்கு சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி என வைப்பதுண்டும்.
ஆனால் சற்று வித்தியாசமாக பாதாம்பருப்பு மற்றும் குடைமிளகாய் கொண்டு செய்யும் சட்னியைக் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த சட்னி இனிப்பும், காரமும் கலந்த சுவையில் இருப்பதால் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையிலும் இருக்கும்.

தேவையான பொருட்கள்
10 - முழு பாதாம் பருப்பு
1 - சிறிய குடைமிளகாய்
1 - ஸ்பூன்கடலைப்பருப்பு
3 - வர மிளகாய்
தேவையான அளவு - உப்பு
சிறிய துண்டு - புளி
2 ஸ்பூன் - நல்லெண்ணெய்
தாளிக்க
அரை ஸ்பூன் - கடுகு
அரை ஸ்பூன் - உளுத்தம்பருப்பு
1 கொத்து - கறிவேப்பிலை

செய்முறை
கடாய் ஒன்றில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் வரமிளகாய் மற்றும் கடலைப்பருப்பை சேர்க்கவும். இதனுடன் குடைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு புளி சேர்த்து சில நொடிகள் வதக்கிய பின்பு, இதனை மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பாதாம் பருப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் தாளிப்பதற்கு எண்ணெய் சேர்த்து இதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
கடுகு பொரிந்ததும் அரைத்த சட்னியை உள்ளே சேர்த்து நன்றாக கலந்துவிட்டால் சுவையான பாதாம் சட்னி தயார். இவற்றினை இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |