சரவணா ஸ்டோரிஸின் 1000 கோடி ரூபாய் வருமானம் மறைப்பு! சிக்கிய முக்கிய ஆவணங்கள்;
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் 1000 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வரிமானத்துறையினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருக்கின்றனர்.
சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு இரண்டு அணிகளாக பிரிந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையில், பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கத்தின் மீது முதலீடு செய்து இருக்கின்றனர். இதன் பின்னர், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும், 150 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் வராத ஆடைகள், நகைகள் வாங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து நகைகள் கூடுதல் கட்டணம் செலுத்தியிருப்பதாக 80 கோடி ரூபாய் மதிப்பில் போலி பில்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர், கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கமும், 6 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாக தெரிவித்தனர்.