விவாகரத்து பற்றி பேசிய சரத்குமாரின் முன்னாள் மனைவி: என்ன சொல்லியிருக்கிறார்?
பிரபல தென்னிந்திய நடிகரான சரத்குமார் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சாயாதேவி என்பவரை மணம் முடித்தார், இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் மனைவியை பிரிந்த சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே விவாகரத்து குறித்து பேசியுள்ள சாயாதேவி, திருமணம் செய்து கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல, மனதளவில் நாம் தயாராக இருக்க வேண்டும்.
சரியான காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ளுங்கள், மனதளவில், உடலளவில் தயாராக இருக்க வேண்டும்.
ஒருநாளில் மட்டும் முடிந்துவிடக்கூடியது அல்ல திருமணம், திருமணம் என்ற பயணத்தில் சரிவர இருக்க வேண்டும்.
காரணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே அந்த பயணமும் சிறப்பாக இருக்கும், உடல் தேவைக்காக திருணம் என்பதல்ல,
நீங்கள் தெளிவாக இல்லாத பட்சத்தில் விவகாரத்து பெறும் போது உடலளவில், மனதளவில் பாதிக்கப்படுவீர்கள், குழந்தைகள் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகலாம்.
எனவே விவாகரத்து பற்றி முடிவுக்கு முன்பு நன்றாக யோசியுங்கள், உங்கள் துணையிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்து கொண்டே இருந்தால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு மிகவும் முக்கியம் என்றும், நீங்கள் எப்போது அதிகளவு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்களோ அப்போது திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.