சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகர் சரத்பாபு: அதிர்ச்சியில் திரையுலகம்!
பல நாளாக நோயுடன் போராடி வந்த சரத்பாபு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நடிகர் சரத்பாபு
தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம் எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் சரத்பாபு.
இவரின் அழகும், நடிப்பும் அனைவருக்கும் பிடித்துப் போக தமிழில் இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் இன்னும் அவரை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டது.
சரத்பாபு ரஜினிகாந்துடன் இணைந்து முத்து, அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் நடித்தது இவருடைய சினிமா பாதையை இன்னும் வலுவாக்கியது.
இவர் தமிழில் மட்டுமல்லாம் தெலுங்கு, கன்னடம் என சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
நோயோடு போராட்டம்
நடிகர் சரத் பாபு கடந்த சில மாதங்களாக செப்சிஸ் என்ற அரிய வகை நோயில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
ஆனால் இவரின் உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க ஆரம்பித்து அதிதீவிர சிகிச்சையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
மேலும், இவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டதாக மே மாதம் 4ஆம் திகதி பல வதந்திகள் பரவியது. ஆனால் அவர் நலமாக இருப்பதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்கள் எனவும் அவரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டார்கள்.
மரணம்
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சரத்பாபு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார்.
இவர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்திருக்கிறார்.
இவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.