சரண்யா பொன்வண்ணனின் மகள் என்ன படிச்சிருக்காங்கன்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
பிரபல தமிழ் சினிமா நடிகையான சரண்யா பொன்வண்ணனின் மகள் மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரண்யா பொன்வண்ணன்
நாயகன் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா. தெனை தொடர்ந்து இன்று வரையில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
குறிப்பாக அம்மா கதாபாத்திரம் என்றாலே சரண்யா தான் பொருத்தமாக இருப்பார் என்ற அளவுக்கு பெயர் பெற்ற நடிகையாக மாறியுள்ளார்.
இவருடைய கணவர் பொன்வண்ணன், இவரும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராவார்.சினிமாவில் மட்டுமன்றி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தி என்று இரு அழகான மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு திருமணம் முடிந்துவிட்டது.
இந்நிலையில் சரண்யா பொன்வண்ணன் இளைய மகள் தற்போது, சென்னை ராமச்சந்திராவில் மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |