கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை சரண்யாவின் மகள்: முதல்வர் கொடுத்த சூப்பரான பரிசு என்ன? வைரலாகும் புகைப்படம்
நடிகை சரண்யா மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தம்பதியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் மற்றும் குணசித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளின் மூத்த மகள் பிரியதர்ஷினி.
இவருக்கும் விக்னேஷ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பசுமை கூடையை பரிசளித்தார். அவரது வருகை மணமக்களுக்கும், பொன்வண்ணன் - சரண்யா தம்பதிக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்வண்ணன் - சரண்யா தம்பதிகளின் மகள் திருமணத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


