பேரதிர்ச்சியில் திரையுலகம்... சந்தோஷ் சிவனின் தந்தை மாரடைப்பில் திடீர் மரணம்
தேசிய விருது வென்ற பழம்பெரும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான சிவன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
தளபதி, ரோஜா, துப்பாக்கி, தர்பார் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை தான் சிவன்.
தந்தையின் மறைவு குறித்து சந்தோஷ் சிவன் அறிவித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

1959ம் ஆண்டிலேயே கேரளாவின் திருவனந்தபுரத்தில் சிவன் ஸ்டூடியோஸை நிருவியவர் சந்தோஷ் சிவனின் தந்தை.
பழம்பெரும் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இவர் மூன்று முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். மேலும், அபயம், யாகம், கொச்சு கொச்சு மோகங்கள், கிள்ளிவதில், கேஷு, ஒரு யாத்ரா உள்ளிட்ட பல பிரபல படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக தனது தந்தை மறைந்து விட்டார் என்கிற சோக செய்தியை இயக்குநர் சந்தோஷ் சிவன் உறுதிப்படுத்தி உள்ளார். தந்தையின் மறைவால் பேரதிர்ச்சியில் சந்தோஷ் சிவனின் குடும்பம் மட்டுமின்றி மலையாள சினிமா உலகமே உள்ளது குறிப்பிடத்தக்கது.