சனி வக்ர பெயர்ச்சி 2024: இந்த ராசியினர் வாழ்க்கையே மாற போகுது...உங்க ராசி என்ன?

Vinoja
Report this article
கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார்.செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.
அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி அதாவது பஞ்சாங்கத்தின் படி ஆனி 15ஆம் திகதி சனிபகவான் வக்ர பெயர்ச்சி அடையப்போகின்றார். அதனால் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்பட போகின்றது.
அப்படி சனி வக்ர பெயர்ச்சியால் வாழ்வில் மாற்றத்தை சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவானால் ஏராளமான நன்மைகள் கிடைக்க போகின்றது. இந்த வக்ர பெயர்ச்சியின் பின்னர் வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்று பல்வேறு விடயங்களிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியத்தில் கூடிய கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசியினரின் பத்தாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இதனால் வீண் பேச்சுக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படலாம். தொழில் ரீதியில் பெரிய மாற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.பல்வேறு நல்ல மாற்றங்களை இந்த காலப்பகுதியில் சந்திப்பீர்கள்.குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடிவரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |