சனி வக்ர பெயர்ச்சிக்கு இன்னும் 10 நாள் தான் - அதிர்ஷ்டத்தை அள்ளபோகும் ராசிகள் எவை?
சனி வக்ர பெயர்ச்சி என்பது, சனி பகவான் தனது வழக்கமான பாதையில் இருந்து பின்னோக்கிச் செல்லும் ஒரு கிரகப் பெயர்ச்சியாகும். 2025 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை, சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார், இது சுமார் 138 நாட்களுக்கு நீடிக்கும்.
சனி பகவான் நீதியின் கடவுள் எனப்படுகின்றார். நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளை தருவார். இந்த நிலையில் சனி வக்கிரப் பெயர்ச்சி நவம்பர் 28 2025 அன்று முடிவடைந்து அதன் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.
எனவெ இந்த பதிவின் மூலம் எந்தெந்த ராசிகளுக்கு 2025 சனி வக்கிரப் பெயர்ச்சி காலம் முடிவடைவது, அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் இது வரை பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பல மடங்கு பலன்களை அள்ளித் தரும் என்று பார்க்கலாம்.

| கடகம் | கடந்த சில ஆண்டுகளாக சனிப்பெயர்ச்சியால் அதிகபட்ச துன்பங்களை அனுபவித்த ராசிகளில் முதன்மையானது கடக ராசி. அஷ்டம சனி விலகினாலும், சனி வக்கிரம் அதே தாக்கத்தைத் தரி வந்தது. இந்நிலை மாறி, அதிர்ஷ்ட ராசியாகக் கருதப்படும் பாகிஸ்தானத்தில் சனி வக்கிர நிவர்த்தி ஏற்படும் போது, தடைபட்ட விஷயங்கள் அனைத்தும் நீங்கும். இதனால் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் மற்றும் வருமானத்தில் மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவை ஏற்படும் |
| கும்பம் | கும்ப ராசிக்காரர்கள் 2025 சனி வக்கிரப் பெயர்ச்சியால் கடந்த சில காலம் நெருக்கடிகளையும் வருமான தடையையும் அனுபவித்தனர். ஆயினும், ஏழரை சனியின் கடைசி சில மாதங்களில் நிலை மாற்றம் ஏற்பட்டு, வருமான தடைகள் நீங்கி, புதிய வாய்ப்புகள் தோன்றும். நிதி நிலையில் முன்னனேற்றம் அதிகமாக இருக்கும். பணத்திற்கான தேவை முற்றிலுமாக நிறைவேறும் என கணிக்கபட்டுள்ளது. |
| துலாம் | துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 சனி வக்கிரப் பெயர்ச்சி உத்தியோகம், உடல்நலம் மற்றும் கொடுக்கல் வாங்கலில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த காலம் முடிவடைவதால், துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் உருவாகும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு, பூர்வீக சொத்துகளில் சிக்கல்கள் தீர்வு, கடன் அடையாமை மற்றும் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).