வக்ர நிவர்த்தியில் சனி பகவான்... திடீர் ஜாக்பாட் இந்த 5 ராசிக்குத் தான்
சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிப்பதால், எந்த ராசிக்கு தீபாவளிக்கு பின்பு ஜாக்பாட் அடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சனியின் வக்ர நிவர்த்தி
கும்ப ராசியில் சனி பகவான் வக்ர நிலையில் பயணித்து வருவது, ஐப்பசி மாதம் 29ம் தேதி, அதாவது நவம்பர் மாதம் 15ம் தேதி முடிவிற்கு வரப்போகின்றது.
நேர்கதிக்கு திரும்பும் சனிபகவான் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் குரு பகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்தில் பயணம் செய்வார்.
சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் தீபாவளிக்குப் பிறகு திடீர் ஜாக்பாட் சில ராசியினர் பெறுவார்கள்.
பயத்தை ஏற்படுத்தும் சனி
பொதுவாகவே சனிபகவான் என்றாலே அனைவருக்கும் ஒரு வித பயம் இருக்கத் தான் செய்யும். அதாவது மனித வாழ்க்கையில் 15 ஆண்டு காலம் பாடாய் படுத்துவார்.
சனிபகவான் ராசி மண்டலத்தை சுற்றி வர 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். ஆனால் நல்லது செய்பவர்களை சனி பகவான் எதுவும் செய்யமாட்டார்.
ஆனால் தீய எண்ணம், தீய பழக்கத்தினை கொண்டவர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடுவார்.
எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?
மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதுடன், சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் தீபாவளிக்கு பின்பு விலகுமாம்.
திருமணம் கைகூடும், வேலை கிடைப்பதில் இருந்த தடையும் நீங்வுதுடன், மன நிம்மதி மற்றும மன மகிழ்ச்சியும் உண்டாகும்.
சொந்தங்களுடன் ஏற்பட்ட பகை விலகுவதுடன், சொத்து சேர்க்கையும் ஏற்படும். பல வழிகளில் பணம் வரும் நிலையில், இத்தருணத்தில் பணத்தை வாரி சுருட்டவும் செய்வீர்கள்.
கவனம் எந்த ராசிக்கு?
விருச்சிக ராசியினர் இந்த காலத்தில் கவனமாக இருப்பதுடன், தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
அஷ்டம சனியாக உள்ள கடக ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாகவும் நிதானத்தோடும் இருக்க வேண்டும்.
Surya Gochar 2024: 9 நாட்களில் சனியை விட்டு விலகும் சூரியன்... பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
சிம்ம ராசிக்காரர்கள் கண்டச்சனி காலம் என்பதால் பயணங்களில் நிதானமும், புதிய வேலைக்கு முயற்சிக்கும் போது பொறுமையோடு நன்கு விசாரித்து சேருவது நல்லது.
மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி காலத்தின் தாக்குதல் இருப்பதால், பொறுமையாக இருப்பது அவசியம். தொழில் முதலீட்டில் அகல கால் வைக்காமல் இருப்பது நல்லது. சனி பகவானை சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |