சனி வக்ர நிவர்த்தி... அமோகப் பலன்களை பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் யார் யார்?
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி என பல பெயர்ச்சிகளை நாம் சந்தித்து சுப, அசுப பலன்களையும் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். தற்போது குருப்பெயர்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது ஆரம்பித்திருக்கிறது சனி வக்ர பெயர்ச்சி.
இந்த சனி பகவானில் பார்வையில் படுபவர்களுக்கு பூர்வபுண்ணிய கணக்குகளின் படி தான் பலன்கள் வழங்கப்படும். இந்நிலையில் சனி பகவான் கடந்த ஜுன் மாதம் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பர் 4 ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, சனி வர்க நிவர்த்தியில் சில ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிடைக்கவுள்ளது அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்
சனி வக்ர நிவர்த்தியில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் தான் கிடைக்கவுள்ளது. அதனால் உங்கள் ஆசைகள் நிறைவேறி மகழ்ச்சியுடன் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். தொழிலில் அதிக இலாபம் பார்ப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியானது அதிஷ்டமானதாக இருக்கிறது. சனி நிவர்த்திக் காலத்தில் சனி பகவானின் முழு ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். அதனால் தொழில் பிரச்சினை இல்லாமல் தொடரும். பணி உயர்வு, ஊதிய உயர்வு என்பன கிடைக்கும். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியானது மங்களகரமானதாக இருக்கிறது. நவம்பர் 4ஆம் திகதியில் இருந்து உங்கள் வாழ்க்கை அதிஷ்டமானதாக இருக்கும். பண ஆதாயத்தில் பஞ்சம் இல்லாத அளவில் இருக்கும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியானது சிறப்பானதாக இருக்கிறது. நவம்பர் 4-ம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடையும் போது கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை பொன்னான வாழ்க்கையாக மாறும். தொழில் வியாபாரம் சிப்பாக இருக்கும். திடீர் பணவரவுகள் வந்து சேரும். தொழில் முயற்சிகள் சிறப்பாக இருக்கும். வாகன, சொத்துக்கள் வாங்குவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |