சனி உதயம் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி!
ஜோதிட ரீதியில் நவகிரங்களின் பெயர்ச்சியும், கிரகங்கள் இணைவதால் உருவாகும் அரிய ராஜ யோகங்களும் ராசி பலன் கணிப்பில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும்.
குறிப்பாக சனி பெயர்ச்சி, நட்சத்திர மாற்றம் வக்ர நிலை, சனி அஸ்டம், உதயம் என அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் பெருகின்றது.

நீதியின் கடவுளாக அறியப்படும் சனி பகவான் ஒருவருடைய கரும வினைகளுக்கு ஏற்ப பாரபட்சமின்றி பலன்களை கொடுத்துவிடுவார் என்பதால், சனி பெயர்ச்சி என்றால் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்படுவது இயல்பு.
அந்தவகையில், கடந்த சில காலம் சனி பகவான் அஸ்தமன நிலையில் இருந்தார். ஆனால் ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாலை 4:49 மணிக்கு, அவர் மீண்டும் உதயமாகியுள்ளார்.

சனி உதயமானது 12 ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
இருப்பினும் சில ராசிகளுக்கு இது அதிக அளவிலான நன்மைகளை அளிக்கும். அப்படி அதிர்ஷ்ட பலன்களை அதிகளவில் அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு, சனி பகவானின் இந்த உதயம் வாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு சாதக மாற்றங்களை கொண்டுவரப்போகுது.
இவர்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான மொத்த பலன்களையும் இவர்கள் அனுபவிக்கும் காலகட்டமாக இது அமையும்.
சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் சனி பகவானின் ஆசியால் இவர்களின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகப்போகின்றது.
மிதுனம்

சனி உதயத்தின் தாக்கத்தால் மிதுன ராசியினரில் வாழ்க்கையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு ஆடம்பட வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் அமையும்.
இவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் மகிழ்ச்சியான திருப்பங்கள் உண்டாகும்.
இவர்களின் வங்கி வைப்பு அசுர வேகத்தில் ஏற்றம் காணும். பல்வேறு வழிகளிலும் வருமானத்துக்கான வழிகள் திறக்கும்.
துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இக்காலகட்டம் ஒரு பொற்காலமாக இருக்கும்.குறிப்பாக தொழில் விடயத்தில் இவர்களுக்கு அமோக முன்னேற்றம் உண்டாகும்.
இவர்களின் நிதி நிலையில், பாரியளவில் மாற்றம் ஏற்படும். புதிய வழிகளில் பெரிய தொகை பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
இருந்த இடத்திலேயே பணம் சம்பாதிக்கும் அளவுக்கு சனியின் ஆசியால் வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும். இந்த காலகட்டத்தில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |