19 ஆண்டுகால சனி திசை மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? வெற்றி நிச்சயம்
மனிதனின் வாழ்க்கையை ஆளும் சனிபகவான் 19 ஆண்டுகால திசை மாற்றம் குறிப்பிட்ட சிலருக்கு எல்லாவற்றிலும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

சனி திசை
சனி பகவான் ஒருவரது வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்தும் 19 ஆண்டு காலமே 'சனி மகா திசை' எனப்படும். இது அதிக நாட்களுக்கு ஒரு ராசியில் நீடிக்கும்.
சனி பகவான் ஒரு நீதிக்கடவுளாவார். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப நமக்கு பாவ புண்ணியங்களை அள்ளி தருவார். அது நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி.

சனி திசை என்றாலே பலரும் பயப்படுவார்கள் அனால் அது முற்றிலும் தவறானது. சனி ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால், அந்த 19 ஆண்டுகளில் அவரைப் பெரும் செல்வந்தராகவும், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவராகவும் அந்த நபர் இருப்பார்.
பலவீனமாக இருந்தால், சில தடைகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடும். இப்படி இருக்கையில் சனி திசை மாற்றம் நன்மையே கொடுக்கும். அதன்படி யாருக்கு நன்மை என்பதை பார்க்கலாம்.

யாருக்கு எப்போது தொடங்கும்?
சனி திசை எப்போது தொடங்கும் என்பதை அறிய ஒரு நபர் பிறந்த நட்சத்திரம் உதவும்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குப் பிறப்பிலேயே சனி திசை தொடங்கிவிடும். மற்ற நட்சத்திரக்காரர்களுக்கு மகா திசைப்படி சனி திசை வரும்.
மகா திசை வரிசை: சூரியன் சந்திரன் - செவ்வாய் - ராகு - சனி - புதன் - கேது - சுக்கிரன் - சூரியன்.
உதாரணமாக, ஒருவருக்கு ராகு திசை நடந்து கொண்டிருந்தால் அந்த 18 ஆண்டுகள் முடிந்தவுடன் சனி திசை (19 ஆண்டுகள்) தொடங்கும்.

யாருக்கு நற்பலன்
சனிபகவான் என்றால் கெடுதல் தான் செய்வார் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
- ரிஷபம் மற்றும் துலாம் : சனி இந்த லக்கினங்களுக்கு யோகக்காரகன் என்பதால் இந்த ராசிகள் சனியால் பெரும் நன்மைகளை பெறுவார்கள்.
- மகரம் மற்றும் கும்பம் : சனியின் சொந்த வீடுகள் என்பதால் ஓரளவுக்குச் சாதகமான பலன்களே கிடைக்கும்.
- மிதுனம் மற்றும் கன்னி : இந்த இரண்டு ராசியும் புதனின் வீடுகள் இதனால் சனியின் நட்பு இவர்களுக்கு சாதக பலன்களை கொடுக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).