சனி மற்றும் ராகுவால் பல பிரச்சினைகளை சந்திக்கவுள்ள 3 ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் காணலாம்.
இவை கிரகங்களை மட்டும் மாற்றாமல் நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி மாறும் போது அதன் தாக்கம் எல்லா ராசிகளிலும் இருக்கும்.
அந்த வகையில் சனி பகவான் சதய நட்சத்திரத்தில் அக்டோபர் 17ஆம் திகதி வரை பயணிப்பார். சதய நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு இருப்பதால் சனி மற்றும் ராகுவால் சில ராசிக்காரர்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
அவ்வாறு பல பிரச்சினைகளை சந்திக்கும் 3 ராசிக்காரர்களான,
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அடுத்த மாதம் பல மோசமான பிரச்சினைகளை சந்திக்க போகிறீர்கள். உங்களுக்கு அடிக்கடி மன உளைச்சல் ஏற்படும், ஆரோக்கியத்தில் குறைப்பாடு ஏற்படும். பொருளாதாரம் மோசமாக காணப்படும். குடும்ப செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இப்போதைக்கு புதிய வேலைகளை தேட முயற்சிக்காதீர்கள். பண முதலீடு விவகாரங்களிலும் கவனமாக இருங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அடுத்த மாதம் தொழில் வியாபார பிரச்சினைகள் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே போகும். அரசு வேலைகளில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும். காதலிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் பாதிப்படையும், வாகனம் செலுத்துபவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
மீனம்
மீனராசிக்காரர்களுக்கு அடுத்த மாதம் தேவையற்ற பிரச்சினைகளும் செலவுகளையும் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மூட்டு வலி, முழங்கால் தொடர்பான பிரச்சினைகளில் அவதிப்பட வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |