2024 சனி பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார்.செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.
கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி பகவான் மட்டும் தான். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார்.
அந்த வகையில் சனி பகவான் வாக்கிய பஞ்சானங்கப்படி, நேற்று மாலை 5.20 மணிக்கு (டிசம்பர் 23, 2023 - மார்கழி 4) மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
2026 மார்ச் 6 வரை சனி பகவான் கும்ப ராசியில் தங்கி இருப்பார்.இந்த சனி பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாயை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இது லாப சனி காலமாகும். இந்த காலக்கட்டத்தில் செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும்.
திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும்.
நீங்கள் தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
ரிஷபம்
சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் பல நன்மைகள் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பழைய கடன்கள் கூட வசூலாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுனம்
புதனை ராசிநாதனாக கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் மனதில் தெளிவு உண்டாகும். எனவே மனதை ஒருநிலைப்படுத்தி உழைக்க தொடங்குவீர்கள்.
பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடந்து கொள்வார்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.
விட்டுக்கொடுத்து சென்று வழக்குகளை முடித்துக்கொள்ளவும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |