இந்த உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டுமானால் உணவு முறைக் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
உணவாக எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மிகுந்த அக்கறை செலுத்தப்படவேண்டும். நாம் எந்த உணவுகளை தேர்வு செய்கின்றோமோ அதுவே ஆராக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.
நாம் தினசரி உணவை ஆரோக்கியமாக சாப்பிடுவதற்கும், நல்ல உடல் நிலையில் இருக்கவும் முயற்சி செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளோம். ஆனால் உண்மையில் ஆரோக்கியமான உணவுகள் என்று நாம் கருதும் பல உணவுகள் உண்மையில் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை.
அவற்றை சரியாக தெரிந்து கொண்டு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இன்றைய உலகில் அனைவருக்கும் ஆரோக்கியமான ஒரு உணவு கிடைப்பது இல்லை. சர்க்கரை, வாழைப்பழங்கள், பிரட் போன்ற பொதுவான உணவுகளும் சிலருக்கு தீங்கு விளைவிக்கின்றது.
இந்த உணவுகள் தீங்கு விளைவிக்க்குமா?
குறிப்பாக சாக்லேட் சாப்பிட்டால் முகப்பரு பிரச்சனை வரும் என்ற பொதுவான பேச்சு இருந்து வருகிறது. முகப்பரு பெரும்பாலும் ஹார்மோன்களின் உற்பத்தியால் ஏற்படுகிறது மற்றும் அவை சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகும், இவை உணவின் மூலம் ஏற்படுவது இல்லை.
இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதால், அவை முகப்பருவைத் தூண்டும் ஹார்மோன்களை ஏற்படுத்தி முகப்பருவுக்கு பங்களிக்கும். ஆனால் சாக்லேட்டை சாப்பிட்டால் முகப்பரு ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
சூயிங்கம் சாப்பிடுவது உங்கள் பற்களுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. ஆனாலும் பலரது வீடுகளில் இதனை சாப்பிட அனுமதிப்பதில்லை. காரணம் இதனை ஒருவேளை முழுங்கி விட்டால் என்ன ஆகும் என்ற பயம் தான்.
ஆனால், தற்செயலாக அதை விழுங்குகினால் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.ஒருவேலை முழுங்கி விட்டால் அவை மற்ற உணவை போலவே உங்கள் செரிமானப் பாதை வழியாகச் சென்றுவிடும், மாறாக உடலில் எந்த பகுதியிலும் ஒட்டி கொள்ளாது.
பிரட் மற்றும் காபி உண்மையில் வெள்ளை பிரட்டில் அதிக கால்சியம் உள்ளது. ஆரோக்கியமான எலும்புகளுக்கு வெள்ளை பிரட் உதவுகிறது.
வெள்ளை பிரட்டில் முழு உணவை விட 65% குறைவான நார்ச்சத்து இருந்தாலும், அது இன்னும் ஒப்பீட்டளவில் நல்ல மூலமாகும்.
அதே போல காபி குடிப்பது உடலுக்கு நாம் நினைக்கும் அளவிற்கு தீங்கு விளைவிப்பதில்லை. காபியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |