கண்டச் சனியாக அமர்ந்த சனி - 3 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பணம் தேடி வந்து வீட்டை தட்டும்! 12 ராசிக்கும் தன லாபம்
சனிபகவான் நேர்கதியில் பயணம் செய்கின்றார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி வரை மகர ராசியில் சனி பகவான் பயணம் செய்வார்.
இந்த காலக் கட்டத்தில் சனிபகவானால் 12 ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
சனி பகவான் உங்களுக்கு புது வேலை கிடைக்கும்.இந்த காலக்கட்டத்தில் கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
ரிஷபம்
இது தர்ம சனி காலம்.பாக்ய சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு இது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். வீண் செலவு செய்யாமல் சேமியுங்கள்.
கடகம்
சனி கண்டச்சனியாக அமர்ந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார். சனி மிகப்பெரிய யோகம். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும்.
சிம்மம்
சனி பகவான் முழு ராஜயோகத்தையும் தருகிறார். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம்.
கன்னி
இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.
துலாம்
சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார்.
விருச்சிகம்
வராத பணம் தேடி வரும். முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார்.
தனுசு
சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும்.
மகரம்
வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்
சனி பகவான் உங்களுக்கு ஏழரை சனியாக நீடிக்கிறார். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரைய செலவுகள் தேடி வரும்.
மீனம்
இது லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம்.