சனி பெயர்ச்சி பலன் 2023 - எதிரிகளை ஓட ஓட விரட்டும் சனி பகவான்! கன்னி ராசிக்கான முழு பலன்கள்
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது.
சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் ஆறாம் இடத்தில் பயணம் செய்வது சிறப்பு. விபரீத ராஜயோகம் தேடி வரும். சனி பகவான் ஆறாம் வீட்டிற்கு வருவதால் கடன்களைப் பற்றி அதிகம் பேசவோ கவலைப்படவோ வேண்டாம்.
கன்னி ராசிக்கான முழு பலன்கள்
2023ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு ராஜயோகம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாகப் போகிறது.
இதுநாள் வரை மறைந்திருந்த நோய்களை அடையாளம் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்வீர்கள்.
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார்.
வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளுக்கு வெற்றி கிடைக்கும். இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
செலவுகள் அதிகரிக்கும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள்.
பண விசயத்தில் கவனம்
சனிபகவான் 3வது பார்வையாக 8ஆம் வீட்டை பார்ப்பதால் எச்சரிக்கை தேவை.
கணவன் மனைவியின் உறவில் சில உரசல்கள் வரும்.
சனிபகவான் 7வது பார்வை விரைய தானத்தைப் பார்ப்பதால் தேவையற்ற பண விரையம், பொருள் நஷ்டம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. யாரை நம்பியும் பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்து போய் விட வேண்டாம்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும்.
ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். எட்டாம் வீட்டை சனி பார்வையிடுவதால் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை.
எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வர வேண்டும். வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடியுங்கள்.