சனி பெயர்ச்சி 2022 - ஏழரை வாய் விட்டு கதற வைப்பார்? தப்பிக்க ஒரே ஒரு பரிகாரம் இருக்கு...!
ஏழரை சனி பிடித்தவர்களுக்கு எல்லாமே ஏழரையாக இருக்கும். வாழ்க்கையே வெறுத்துப்போகும் அளவிற்கு சோதனைகள் வரும்.
ஏழரை ஆண்டு காலம் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு அடுத்த முப்பது ஆண்டு காலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்திச் செல்வதற்காகவே சனி உங்களுக்கு ஏழரை சனி காலத்தல் சில படிப்பினைகளைத் தருகிறார்.
சாமி சாமி பாட்டுக்கு பாட்டி போட்ட குத்தாட்டம்....மேடையை அதிர வைத்த காட்சி! மிரண்டு போன இளைஞர்கள்
விரைய சனி கட்டத்தில் சிலருக்கு தொழில் மூலம் நல்ல பணவரவு இருக்கும்.
ஆனால் அந்தப் பணத்தை சேமிக்க முடியாமல் விரையங்கள் இருக்கும். பின்னாளில் பணக்கஷ்டம் வரும்போது இவ்வளவு பணம் வந்தும் அதை சேர்த்து வைக்காது விட்டுவிட்டோமே என்ற மன அழுத்தம் வரும்.
அடுத்து ஜென்மச் சனியாக ராசியில் அமர்பவர் ஜாதகரின் மனதை ஆளுவார். மன உளைச்சல் தந்து தடுமாற வைப்பார். துவள வைப்பார்.
வாய் விட்டு கதற வைப்பார். அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் போது மிகவும் கஷ்டப்படுத்துவார். கடுமையான பலன்களைத் தருவார்.
ஜென்ம சனி காலம்
ஜென்மச் சனி காலத்தில் ஒருவருக்கு தூக்கம் வராத நிலை இருக்கும்.
அதிலும் ஒருவரின் ஜென்ம நட்சத்திர பாதத்திற்கு அருகே சுமார் நான்கு மாதங்கள் சனி செல்லும்போது கடுமையான கெடுபலன்கள் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் ஒருவர் செய்யும் எத்தகைய முயற்சியும் வெற்றி பெறாது. ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது கொடிய பார்வை ஏழாமிடத்தில் பதியும். ஏழாமிடம் என்பது எதிர்பாலினத்தின் இடம்.
கணவன் - மனைவி அல்லது காதலர்- காதலி பற்றிய இடம். இந்த நிலையால் ஜென்ம ராசியில் இருக்கும்போது சனி காதலின் இன்னொரு பரிமாணத்தை உணர வைப்பார். அதாவது காதலிப்பவரின் உண்மையான முகத்தைப் புரிய வைப்பார்.
அடுத்து அவரது பார்வை பத்தாமிடத்திலும் இருக்கும் என்பதால் தொழிலில் அல்லது வேலையில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவார். அல்லது வேலையை விட்டு நீக்குவார். தொழில் முடக்கம், தொழிலை நடத்த முடியாத நிலை போன்றவை இருக்கும்.
சனியை எப்படி சாந்தப் படுத்தலாம்?
ஏழரைச்சனி முடியும்வரை சனிக்கிழமை இரவில் படுக்கும் போது கைப்பிடி அளவு சனியின் தானியமான எள்ளை தலைக்கு கீழே வைத்து உறங்கி, காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து சனியின் வாகனமான காகத்திற்கு அன்னமிடலாம்.
சனியை திருப்திப்படுத்த மாற்றுத் திறனாளிகள், பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள் வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம். காலில்லாதவர்களுக்கு ஊன்றுகோல் தானம் தருவது நல்ல பரிகாரம்.
பெருமாளுக்கு விளக்கேற்றலாம்
சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.
வைணவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம். பெருமாளுக்கு விளக்கு ஏற்றி வழிபடலாம்.
சனிக்கிழமைகளில் விரதம்
ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி.
அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன்பின் வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனி தருகிறார்.
திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூரில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோவில் போன்ற சனியின் திருத்தலங்களுக்குச் சென்று சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யலாம்.