சனி நட்சத்திர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பம்... இதை மட்டும் செய்யாதீங்க
ஜோதிடவியலில், சனியின் பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

சனி நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் 'கர்ம காரகன்'எனப்படுகின்றார். நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நமகடகு பலனை திரும்ப தருபவர்.

இம்முறை, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதியன்று சனி பகவான் தனது பெயர்ச்சியை நட்சத்திரப்பெயர்ச்சியாக மாற்றவுள்ளார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த கிரக நிலை சுமார் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் ஒருவித மந்த நிலையையும், மன அழுத்தத்தையும் பெறுவார்கள் எனப்படுகின்றது.
இதனால் சில ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:05 மணிக்கு, சனி கிரகம் உத்தரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பிரவேசிக்கிறது.
இதனால் எந்தெந்த ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப்போகின்றனர் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- இக்காலகட்டத்தில், மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.தொழில் விஷயத்தில் சில பிரச்சனைகள் வரும். எந்த சூழ்நிலையிலும் பொறுமையுடன் இருப்பது அவசியம். அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இழப்புகளுக்கு வழிவகுக்கலாம். நிதி சார்ந்த விஷயங்களில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடகம்
- கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கால கட்டம் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். உறவுகளில் தவறான புரிதல்கள் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள். மன அழுத்தம் அதிகமாகும். எனவே அமைதியைக் கடைப்பிடியுங்கள். பேசி பிரச்சனையை தீர்ப்பகது நல்லது.
துலாம்
- துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இது கடின உழைப்பு நிறைந்த நாளாக அமையும். ஆனால் கடின உழைப்பிற்கு பலன் தாமதமாக கிடைக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் குறைவாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமையும் அதிகரிக்கக்கூடும். உங்கள் தன்னம்பிக்கையில் ஒரு மந்தம் வரும். விடாமுயற்ச்சி செய்தால் மட்டுமே காலம் சீரடையும்.
மகரம்
- மகர ராசியின் மீது சனியின் தாக்கம் ஆழமானதாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாகபணிச்சுமை அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கக்கூடும். உடல்நலத்தின் மீதான அலட்சியம் பாதகமாக அமையலாம். பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சிந்தித்து ஒரு விடயத்தில் இறங்குங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)