நடிகை சுபாஷினியின் விபரீத முடிவிற்கு காரணம் என்ன? சக நடிகையும், தோழியும் வெளியிட்ட உண்மை
சீரியல் நடிகை சுபாஷினி கணவன் மனைவி பிரச்சனை காரணமாக சமீபத்தில் விபரீத முடிவு எடுத்த நிலையில், அவருடன் நடித்த சக நடிகையும், தோழியுமான அபி பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.
நடிகை சுபாஷினி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கயல் சீரியலில் நடித்தவர் தான் நடிகை சுவாஷினி. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிலையில், கணவருடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், படப்பிடிப்பிற்காக சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

இவர் சமீபத்தில் தனது அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், கணவர் மனைவி பிரச்சனையின் காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

சுபாஷினியின் கணவர் தான் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை தொடர்பு கொண்டு சுபாஷினி அறையை பார்க்க கூறியதாகவும், பின்பு காவலாளி அதிர்ச்சியடைந்து போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளாராம்.

சக நடிகை கூறிய உண்மை
கயல் சீரியலில் அவருடன் நடித்த சக நடிகையும், தோழியுமான அபி கூறுகையில், சுபாஷினி மிகவும் தைரியமான நபர் என்றும் அவரது இந்த முடிவு அனைவருக்கும் நம்ப முடியாமல் இருந்தது என கூறியுள்ளார்.
கணவன் மனைவி இருவரும் பாசமாக இருப்பார்கள். படப்பிடிப்பில் மற்றவர்கள் இவர்களைப் பார்த்து பொறாமை படும் அளவிற்கு அவ்வளவு பாசமாக இருப்பார்கள்.

குடும்பத்தில் பிரச்சனை என்று இதுவரை கூறியதே கிடையாது, அப்படி பிரச்சனை எதுவும் இருந்தால் ஒரு பண்ணிருக்கலாம்... சக நடிகை ஒருவர் அவரது சடலத்தை பார்த்து புகைப்படம் எடுத்து தனக்கு அனுப்பினார்.. பார்க்கவே மிகவும் பயமாக இருந்தது... அவரது மரணத்தை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

படப்பிடிப்பில் தனக்கு புடவை தேவைப்பட்ட போது நான் யோசித்துக் கொண்டிருந்தேன். உடனே சுபாஷினி தனது நிச்சயதார்த்த புடவையை எடுத்து கொடுத்தார். நிச்சயதார்த்த மற்றும் கல்யாண புடவையை யாரும் யாருக்கும் கொடுக்க மாட்டார்கள்... ஆனால் சுபாஷினி அபி இதை கட்டிக்கோ என்று கூறினாராம்.
ஆனால் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவருக்கும் எப்போதும் போல் சின்ன வாக்குவாதம் தான் ஏற்பட்டது என்றும் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தது தெரியாமல் விஜே சித்து மாதிரி சுபாஷியை சித்தரித்து பேச வேண்டும் எனவும் நடிகை அபி கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |