சனி வக்ர நிவர்த்தியால் மாறும் தலைவிதி... எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம்
நீதியின் கடவுளான சனி பகவான் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் நிலையில், பஞ்சாங்கப்படி ஜுன் 17ம் தேதியிலிருந்து சனியின் வக்ர காலம் ஆரம்பிக்கின்றது. மேலும் நவம்பர் 7ம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகின்றார்.
ஜோதிடத்தில் மெதுவாக நகரும் கிரகமாக இருந்தாலும் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் நீடிக்கின்றார். இவர் நிவர்த்தி அடைந்த பின்பு நவம்பம் முதல் சனி மீண்டும் நேராக நகர்கின்றார். இதனால் தீபாவளிக்கு பின்பு நல்ல பலன்களை சில ராசியினர் பெற இருக்கின்றனர்.
ரிஷப ராசி:
ரிஷப ராசியினருக்கு நல்ல பலன் கிடைப்பதுடன், தொழில், வியாபாரம் போன்றவற்றில் அனுகூலமான பலன்களும் கிடைக்கின்றது. இந்த காலக்கட்டத்தில் அடுத்தடுத்து வெற்றி கிடைக்கும் நேரத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி நிலவும்.
மிதுன ராசி:
மிதுன ராசியினருக்கு சனியின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கின்றது. தந்தையிடமிருந்து பணம் கெிடைக்கும். உழைப்பின் முழுபலனை அடைவீர்கள். பரம்பரை சொத்துக்களில் ஆதாயம் கிடைக்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசியினை பொறுத்தவரையில், இந்தக் காலக்கட்டத்தில் பணியிடங்களில் நல்ல பலன் கிடைப்பதுடன், வாழ்வில் மகிழ்ச்சியும் அடைவார்கள். நல்ல செய்திகள் அடுத்தடுத்து கிடைக்கும் நிலையில், வியாபாரத்திலும் வெற்றி உண்டாகும். மங்களகரமான இந்த நேரத்தில் வருமானமும் அதிகரிக்கும்.
தனுசு ராசி:
தனுசு ராசியினருக்கு வேலைத் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். கடின உழைப்பின் பலன்களுடன், பதவி உயர்வு கிடைக்கின்றது.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி வக்ர நிவர்த்தியடையும் நிலையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிபகவான் வக்ர காலம் ஆகஸ்ட் 24ம் முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நீடிக்கின்றதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |