சனியின் கடைசி ராஜ யோகம் - ஜாக்பட் எந்த ராசிகளுக்கு?
2025 ஆம் ஆண்டின் கடைசி சனி-புதன் சேர்க்கை டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக சில ராசிகளின் வாழ்க்கையில் முன்னேற உள்ளனர்.
சனியின் ராஜ யோகம்
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இப்படி நகரும் நேரத்தில் அவை இன்னுமொரு கிரகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டி இருக்கும்.
அந்த வகையில் டிசம்பர் 30-ஆம் தேதி பிற்பகல் 12:43 மணியளவில் சனி மற்றும் புதன் இருவரும் இணைந்து கேந்திர திஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர்.
இந்த ராஜயோகம் குறிப்பிட்ட சில ராசிகளை புத்தாண்டில் சிறப்படைய செய்யும். ஏனென்றால் இது 2025இன் கடைசி ராஜயோகமாகும். எனவே அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மிதுனம்
சனி மற்றும் புதன் பகவானின் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரும். புதன் பகவான் தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டிலும், சனி பகவான் சுக ஸ்தானமான நான்காவது வீட்டிலும் சங்கரிக்க இருக்கின்றனர். இந்த கால கட்டம் உங்களுக்கு தொழிலிலும் பணத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நிதி சார்ந்த முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். உங்களின் எந்த சேலைக்கான திட்டமிடலும் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். பொருளாதாரம் மூலம் வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதன் பகவானின் சேர்க்கை நிதி ரீதியான நன்மைகளை வழங்கும். வேலையில் பொறுப்புக்கள் அதிகரித்தாலும், அது உங்களுக்கு நேர்மறையான பலன்களையே கொடுக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முயற்ச்சி நன்மை தரும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலவும். பணத்தை சேமிப்பதற்கான நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் மன அழுத்தம் குறைந்து மனம் மகிழ்ச்சியாக மாறும். புதிய வேலை பற்றிய நல்ல செய்திகள் எங்களுக்கு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியில் புதன் பகவான் லக்ன ஸ்தானத்திலும், சனி பகவான் நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்க இருக்கின்றனர். இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வருமானத்தை திறக்க புதிய வழிகள் பிறக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். உங்கள் கடின உழைப்புக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்கால திட்டங்கள் வலுவடையும். பதவி உயர்வு அல்லது பதவி மாற்றம் சாத்தியமாகும்.
மீனம்
மீன ராசிக்கு சனி-புதன் சேர்க்கை சிறப்பான நன்மைகளைத் தரும். சனி பகவான் லக்ன ஸ்தானத்திலும், புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருக்கின்றனர். எனவே இந்த காலகட்டத்தில் புதிய வீடு கட்டுதல் அல்லது பழைய வீட்டை பராமரிப்பு செய்தல், மனை வாங்குதல், நிலம் வாங்குதல் போன்ற உங்கள் கனவுகள் நனவாகும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).