30 வருடங்களுக்கு பிறகு கும்பத்தில் சனி...இந்த ராசியினருக்கு தான் ஜாக்பாட்
பொதுவாகவே கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி பகவான் மட்டும் தான்.
ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார்.
பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள்.
ஒரு ராசியில் இடம்பெறும் சனிபகவான் மீண்டும் சுழன்று அதே ராசிக்கு வர 30 ஆண்டு காலம் ஆகிறது. அப்படி தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்த வீடான கும்பத்தில் இடம்பெயர்ந்துள்ளார்.
மார்ச் மாதம் உதயமாகும் சனிபகவானால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிட்டப்போகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமாக சூழலே அமையும். உங்கள் ராசியின் அதிபதி தான் சனி என்பதால், அவரின் ஆசீர்வாதத்தால் உங்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலும், கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் நல்ல ஒருங்கிணைப்பை கொடுப்பார்கள்.
இதன் மூலம் உங்களுக்கு தற்செயலாகவே லாபம் உண்டாகும். அதே நேரத்தில், சனி பகவான் உங்கள் ராசியில் ராஜயோகத்தை உருவாக்குவதால் உங்கள் தினசரி வருமானம் அதிகரிக்கும். அப்படி வரும் பணத்தை நீங்கள் சேமித்தும் வைப்பீர்கள்.
சிம்மம்
சனிபகவான் உங்களின் ராசியிலிருந்து ஏழாமிடத்தில் உதிக்கப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறலாம். உங்கள் எதிரிகளையும் வெல்வீர்கள்.
வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதே நேரத்தில், சில வணிக ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் வர்த்தகர்களுக்கு பெரும் லாபத்தை அளிக்கின்றன, இது நிதி நிலைமையை பலப்படுத்துகிறது.
மேலும், உங்கள் ராசியில் சனி ராஜயோகத்தை உருவாக்குவதால் இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும்.
மேஷம்
சனிபகவான் உங்களின் ராசியில் இருந்து 11வது வீட்டில் உதயமாவதால், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது மனதில் மகிழ்ச்சியைத் தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். முதலீட்டில் லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
உங்களுக்கு நேரம் சாதகமாக இருப்பதால், பங்குச் சந்தை, வணிகம், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் முதலீடு செய்யலாம். நல்ல பலனே கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |