வாரிசு ஆடியோ லோஞ்சில் கலந்து கொள்ளாத சங்கீதா: ஏன் தெரியுமா?
அண்மையில் நடைபெற்ற வாரிசு படத்தின் ஆடியோ லோஞ்சிற்கும் அட்லியின் வளைகாப்பிற்கும் விஜய் சங்கீதா இல்லாமல் தனியாக சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாரிசு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய பிரபலங்களின் படங்கள் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்காவிட்டாலும் அடுத்த மாதம் 12 திகதி விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை
வழக்கமாக விஜய்யின் பட விழாக்களில் கலந்துக் கொள்ளும் அவரின் மனைவி சங்கீதா வாரிசு ஆடியோ லோஞ்சில் கலந்துக் கொள்ளவில்லை.
அத்துடன் சமீபத்தில் இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்வில் கூட விஜய் மட்டும் கலந்துக் கொண்டார். அதிலும் சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை. இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காரணம்
அட்லி பிரியாவின் வளைகாப்பு மற்றும் வாரிசு ஆடியோ லோஞ்சிலும் கலந்துக் கொள்ளவில்லை இதற்கான காரணம் வெளிநாட்டில் இருக்கும் தனது குழந்தைகளுடன், சங்கீதாவும் அங்கிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதனால் அவர் எந்த நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்ளவில்லையாம்.