‘பூவே உனக்காக’ சங்கீதா கணவர் யார்ன்னு தெரியுமா? அவர் இந்த பிரபலமாம்!
‘பூவே உனக்காக’ பட நடிகை சங்கீதா கணவர் பற்றியும், அவருடைய காதல் திருமணம் பற்றியும் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சங்கீதா
90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. தமிழில் ‘என் ரத்தத்தில் ரத்தமே’, ‘இதயவாசல்’, ‘எல்லாமே என் ராசா’, ‘பூவே உனக்கா’ போன்ற படங்களில் நடித்தார்.
ஆனால், சங்கீதாவிற்கு முதல் முதலாக நடிகர் ராஜ்கிரண் நடித்த ‘எல்லாமே என் ராசா’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படத்தில் சங்கீதாவின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குடும்ப பாங்கான முக அமைப்பும், அவருடைய எளிமையான நடிப்பும் சங்கீதாவிற்கு பட வாய்ப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனையடுத்து, நடிகர் விஜய்யோடு ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. நடிகை சங்கீதா தமிழ் படங்களில் மட்டுமல்ல, மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
சங்கீதாவின் காதலும், திருமணமும்
பிரபல நடிகையா உச்சத்தில் வளர்ந்து கொண்டு வந்தபோது, கடந்த 2000ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சரவணன் என்பதை திருமணம் செய்து சினிமா விட்டு ஒதுங்கினார். தற்போது குடும்பம், குழந்தை என்று தன் மகிழ்ச்சியாக வாழ்க்கை வருகிறார்.
இந்நிலையில், இவருடைய காதல் வாழ்க்கையைப் பற்றி ஒரு பேட்டியில் சங்கீதா கூறிய தகவல்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ‘பூவே உனக்கா’ படத்தில் ஒளிப்பதிவாளராக சரவணன் வேலை பார்த்து இருக்கிறார். அப்போது, சங்கீதாவிற்கும், சரவணனுக்கும் நட்பு ஏற்பட்டது.
இந்தப் படம் முடிந்த பிறகு ஒரு வருடம் இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லை. இதன் பின்னர், ‘ஆஹா’ படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தபோது, சரவணன் இருந்த ஸ்டூடியோவில் வேறொரு திரைப்படத்தில் நடிகை சங்கீதா நடித்துக்கொண்டிருந்தபோது இருவரும் சந்தித்துள்ளனர்.
அதன் பிறகு இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இத்தம்பதிக்கு தேஜஸ்மி என்ற மகள் உள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு, ஒரே ஒரு மலையாள படத்தில் சங்கீதா நடித்துள்ளார். மேலும், சிம்பு நடித்த "சிலம்பாட்டம்" என்ற திரைப்படத்தில் தன் கணவருக்கு உதவி இயக்குனராக சங்கீதா பணியாற்றினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |