ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில், அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு தற்போது முழுநேர அரசியலில் இருக்கின்றார்.
இந்த வருடம் வரும் தேர்தலில் இவரது கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், வெற்றியை எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். நடிகர் விஜய் 1999ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவரது மனைவி விஜய்யை பிரிந்து வாழ்கின்றார் என்ற பேச்சு அவ்வப்போது எழுந்து வந்தது. தற்போது சங்கீதா வைத்துள்ள அடுத்தடுத்த குற்றச்சாட்டு அனைவரையம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
விவாகரத்திற்கு முக்கிய காரணமாக நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தான் என சங்கீதா குறிப்பிட்டுள்ளாராம்.
நன்றாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் நடிகை ஒருவரால் விரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் விஜய்யை விட்டு பிரிந்து லண்டனில் வாழ்ந்துவந்ததாகவும் கூறியுள்ளார்.
பின்பு சமாதானமாக பேசி மீண்டும் அழைத்ததால் வாழ்ந்து வந்ததாகவும், ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றோம்.
கடந்த 2021ம் ஆண்டு அந்த நடிகையுடன் தொடர்பில் இருக்கின்றார். இந்த தொடர்பினை முறித்துக்கொள்ள அவரிடம் பேசிய போது சரி என்று பதிலளித்தவர், ஆனால் இன்னும் தொடர்பில் தான் இருந்து வருகின்றார்.
தன்னை சுதந்திரமாக நடமாட விடாமலும், தனக்கான நிதி ஆதாரத்தையும் தடுத்து கட்டுப்பாடுகள் விதித்ததுடன், செலவுக்கு பணம் கூட கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.
இந்த பிரச்சனையால் உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், குறித்த நடிகையின் பெயரை தற்போது நாகரீகம் கருதி கூறவில்லை... ஆனால் தேவைப்பட்டால் ஆதாரத்தை வெளியிட்டு நடிகையின் பெயரையும் கூறுவேன் என்று சங்கீதா கூறியுள்ளார்.

மேலும் விஜய்யுடன் தொடர்பில் இருக்கும் நடிகையை எதிர்மனுதாரராகவும் சேர்ப்பதகாவும், இத்தனை ஆண்டுகள் மகன் மற்றும் மகளின் நலன் கருதி அமைதியாக இருந்ததாகவும், இதற்கு பின்பு தன்னால் வாழமுடியாது... மனதளவில் பாதிக்கப்பட்டதுடன், சுயமரியாதையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இருவரும் பேசி கருத்து வேறுபாடுடன் பிரிந்து செல்லலாம் என்று நினைத்தாகவும், அதற்கும் வழியில்லாமல் போனதால் தங்களது திருமணத்தை சட்ட ரீதியாக முறித்து வைக்க வேண்டும் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |