சங்கீதாவை இப்படி சொல்லி அசிங்கப்படுத்தலாமா? கொந்தளிக்கும் பெண்கள்
விவாகரத்து பற்றி விஜய் 'வொர்த் இல்லை' என பேசியது சோஷியல் மீடியாவில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

சங்கீதா விவாகரத்து
விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரம் தற்போது தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது தேர்தல் வரும் சமயத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது மக்கள் மத்தியில் பேசு பொருளாகி வருகின்றது.
இந்த நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அதில் பேசிய விஜய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறிய விடயம் தற்போது பெண்களை கோபமடைய செய்துள்ளது.

மகிளீர் தினத்தில் பேசிய விஜய்
ஒருபக்கம் விஜய்க்கு ஆதரவாகவும், மற்றொரு பக்கம் சங்கீதா மற்றும் த்ரிஷாவுக்கு எதிராக சமூக வலைத்தள பக்கத்தில் மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
என்ன தான் விஜய்க்கு அடுத்து அடுத்து நெருக்கடி வந்தாலும் மக்கள் அனைவரும் விஜய் பக்கம் தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சர்ச்சைக்கு பின்னர் முதல்முறையாக நேற்று (மார்ச் 7) நடந்த சர்வதே மகளிர் தின விழாவில் சங்கீதா விவாகரத்து விடயம் பற்றி நடிகர் விஜய் பேசி இருந்தார்.
அவர் பேசியதாவது "சமீபத்தில் நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது வேண்டாம் அதை நான் பார்த்துகொள்கிறேன் என கூறினார்.

கோபப்பட்ட பெண்கள்
மேலும் பேசிய அவர் நாம் அனைவரும் சேர்த்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள்.
அது வொர்த் இல்லை" என பேசியிருந்தார். விஜய் பேசிய மற்ற விடயங்கள் பரவாயில்லை என்றாலும் வொர்த் இல்லை என்ற வார்த்தை பெண்களை கோபமடைய வைத்துள்ளது. இது சமூக வலைத்தள பக்கத்தில் எதிர்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
விவாகரத்து போன்ற ஒரு கடினமான விடயத்தை விஜய் எப்படி இப்படி வொர்த் இல்லை இல்லை என்று விளையாட்டாக கூறலாம் என பெண்கள் கோபமடைந்துள்ளனர். பொதுவாக விஜய்க்கு பெண்கள் ரசிகர்கள் ஏராளம். அப்படி இருக்க விஜய் இப்படி பேசியது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பெண்கள் விஜயை ஆணாதிக்கவாதி என்றும் ஆணவத்தோடு இருக்கிறார் அவர் கொஞ்சம் கூட மரியாதை இல்லை சங்கீதாவை துச்சமென நினைத்தாரா விஜய் என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருந்தாலும் விஜய் அவ்வாறு பேசவில்லை என தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒருபக்கம் கூறி வருகின்றனர். இதற்கு விஜய் பதில் தெரிவிப்பாரா இல்லை பெண்கள் வன்மத்தை சம்பாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |