அவ என் குழந்தை டா... சாண்டியின் மகளை கேலி செய்வதருக்கு மனைவி கொடுத்த பதிலடி!
தமிழ் சினிமாவின் நடன மாஸ்டரான சாண்டி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரன்னர் அப்பாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நபராக இருந்து வந்தார். தமிழ் சினிமாவில் பிஸியான ஒரு நடன இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சாண்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சாண்டி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, சாண்டியின் மகளை நபர் ஒருவர் உருவக் கேலி செய்துள்ளார்.
இதற்கு சாண்டி மனைவி பதிலடி கொடுத்துள்ளார். சமீபித்தல் சாண்டியின் மனைவி தன் மகளின் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், குழந்தை ஏன் குண்டாக இருக்கிறது என்றும், ஒல்லியாக இருந்தால் தான் சாண்டி மாதிரி நன்றாக டான்ஸ் ஆட முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எனவும் சில்வியா, “இதைப் பற்றி கேள்வி கேட்டால், பாடி ஷேமிங் ஆதரவாளர்கள் இந்த நபருக்கு ஆதரவளிப்பார்கள். எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.
அது ஏன்? எப்போதும் ஒரு பெண் மற்றொரு பெண்ணை பற்றி தவறாக பேசுகிறாள்? கொழந்த டா அவ,. இப்போதே சமூகத்தின் அழுத்தம் தொடங்கியது. நமது எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
