ஓவர் கோட்டை கழட்டி எறிந்த மச்சினிச்சி... சாண்டி மாஸ்டர் செய்த தரமான சம்பவம்
பிரபல நடன இயக்குனர் சாண்டியின் மச்சினிச்சி நடனமாடிக்கொண்டிருக்கையில், தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி வீசிய நிலையில், சாண்டி செய்த காரியம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
பிக்பாஸ் சாண்டி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரியாத அனைத்து மக்களுக்கும் நாயகனாக மாறிய சாண்டி மாஸ்டரின் நடனம் வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் ரன்னராக வந்த நிலையில், சாண்டி இருந்த சீசன் மக்களுக்கு பிடித்த சீசனாகவும் மாறியது. அந்த அளவிற்கு எந்தவொரு சண்டையும் இல்லாமல் பாசமாக விளையாடியது மட்டுமின்றி, உள்ளே நண்பர்களாக மாறியிருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்பு சாண்டி மாஸ்டரின் மனைவியின் தங்கை, அதாவது சாண்டியின் மச்சினிச்சி சிந்தியா அனைவருக்கு நல்ல அறிமுகமானவராக இருந்து வருகின்றார்.
சாண்டியுடன் சிந்தியா போடும் நடனத்திற்கே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், தற்போது சிந்தியா நடனமாடிய போது தான் அணிந்திருந்த ஓவர் கோட்டை கழற்றி வீசியுள்ளார்.
இதனை சில நொடிகள் கழித்து சாண்டி எடுத்து அவருக்கு மறுபடியும் போட்டுவிடுகின்றார். இக்காட்சியினை அவதானித்த ரசிகர்கள் சாண்டியை கொண்டாடி வருகின்றனர்.