Sandhya Raagam: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ரகுராம்... தனம் மீது விழுந்த பழி
சந்தியா ராகம் சீரியலில் தனம் கொடுத்த கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட ரகுராம் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தற்போது அக்கா தங்கைகளாக வாழ்ந்து வரும் கதையைக் கொண்டுள்ளது.
தனத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையையும் மாயா சரி செய்து வருகின்றார். இதனை அறியாத தந்தை ரகுராம் மாயா தனது மகளை தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக அவரை எதிரியாக பார்க்கின்றார்.
மாயாவை வெறுத்து ஒதுக்கிய சீனு தற்போது உண்மையறிந்து மாயாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். ஆனால் புவனேஷ்வரியின் பழிவாங்கும் எண்ணம் மட்டும் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கின்றது.
தற்போது தனம் மற்றும் கதிர் இருவரும் கோவிலில் பிரசாதம் வழங்கிய நிலையில், தனம் தனது தந்தைக்கும் கொடுத்துள்ளார். இதில் புவனேஷ்வரி விஷத்தை கலந்துள்ளார்.
ஆனால் இதனை அறியாத ஜானகி தனது கணவர் ரகுராமிற்கு கொடுத்துள்ள நிலையில், அவர் தற்போது உயிருக்கு போராடும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
