Sandhya Raagam: மாமனாரைக் காப்பாற்ற தன் உயிரை துறக்க துணிந்த மருமகன்! கதிரை காப்பாற்ற தனா எடுத்த முடிவு
சந்தியாராகம் சீரியலில் கதிரை ஒதுக்கி வைத்த மாமனார் ரகுராமைக் காப்பாற்ற தற்போது கத்திக் குத்து வாங்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. அக்கா தங்கைகளாக வாழ்ந்த இருவர் திருமணத்தால் பிரிகின்றனர்.
தற்போது அவர்களின் பிள்ளைகள் அக்கா தங்கையாக வாழ்ந்து காட்டும் கதையைக் கொண்டு செல்கின்றது. தனாவை பழிவாங்க துடிக்கும் கார்த்தி ஒருபக்கம், ஜானகி ரகுராமைப் பழிவாங்க புவனேஷ்வரி ஒரு பக்கம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
தனா மற்றும் தந்தை ரகுராம் இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்பொழுது கதிரை கொலை செய்ய கார்த்தி பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றார்.

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி
எப்படியோ தப்பித்து வந்த கதிர் கடைசியாக மாமனார் ரகுராமைக் காப்பாற்ற தனது உயிரை துறக்க துணிந்துள்ளார். தற்போது கத்திகுத்துப்பட்டு கதிர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் காணப்படுகின்றார்.
அவரைக் காப்பாற்ற பணம் வேண்டும் என்பதால் தனா பேட்மிட்டன் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |