Sandhya Raagam: நேருக்கு நேர் சவால் விட்ட கார்த்திக்... ரகுராம் உயிர் காப்பாற்றப்படுமா?
சந்தியா ராகம் சீரியலில் தனத்தின் காணொளியினை வெளியிடுவதாக கூறி கார்த்திக் பொலிசார் முன்பு மிரட்டல் விடுத்துள்ளார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தற்போது அக்கா தங்கைகளாக வாழ்ந்து வரும் கதையைக் கொண்டுள்ளது.
தனத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் மாயா தான் அவரைக் காப்பாற்றுகின்றார். இது ரகுராமிற்கு தெரியாமல் இதை செய்து வரும் மாயா கெட்டப்பெயர் எடுத்து வருகின்றார்.
தற்போது கார்த்திக் மீண்டும் மீண்டும் தனத்திற்கு தொந்தரவு கொடுத்துவரும் நிலையில், அவரை சந்திக்க மாயா, ஜானகி வந்துள்ளார்கள்.
அவர்களிடம் தனத்தின் காணொளியினை வெளியிடுவதாகவும், ரகுராம் இதனால் உயிரைவிடுவார் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
